×

அமமுகவுக்கு சில பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை; வாக்குச்சாவடி முகவர்களின் வாக்குகள் எங்கே? டிடிவி கேள்வி

சென்னை: அமமுகவுக்கு சில பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை; வாக்குச்சாவடி முகவர்களின் வாக்குகள் எங்கே என டிடிவி கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் தேர்தல் முடிவு 23ம் தேதி வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 38 நாடாளுமன்ற மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவும் வெளியிடப்பட்டது. இதில் திமுக 38 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று மாபெரும் தோல்வியை சந்தித்தது. இதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த அமமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெரும் என கணிக்கப்பட்டது.  ஆனால், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அமமுக தோல்வியையே சந்தித்தது. தகுதி நீக்க எம்.எல்.ஏக்களும் தங்களின் தொகுதிகளில் தோல்வியை சந்தித்தனர். பல இடங்களில் 4வது இடத்திற்கு அமமுக தள்ளப்பட்டது.


இது தொடர்பாக சென்னை அடையாறு இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுவதாவது; தேர்தல் முடிவில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அமமுக தோல்விக்கான காரணம் குறித்து போகப் போகத் தெரியும். அமமுகவில் இருந்து விலக விரும்புவார்கள் தாராளமாக விலகிக்கொள்ளலாம். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் கூறினார்.

சரமாரி கேள்வி;
* அமமுகவுக்கு சில பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை; வாக்குச்சாவடி முகவர்களின் வாக்குகள் எங்கே சென்றது?
* திமுக வென்ற எம்.பி. தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வென்றது எப்படி?
* நான் வசிக்கும் இடைத்தேலேயே 14 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது; இது எப்படி சாத்தியம்?


Tags : agents ,DVV , Amateur, polling agent, where votes are, DVV question
× RELATED திருவள்ளூர் சட்டமன்ற...