×

இந்தியாவில் தாக்குதல் நடத்த இலங்கையில் இருந்து படகில் வரும் 15 ஐஎஸ் தீவிரவாதிகள்: கேரள கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

திருவனந்தபுரம்: இலங்கையில் இருந்து 15 ஐஎஸ்  தீவிரவாதிகள் கேரளா, லட்சத்தீவை நோக்கி படகில் வருவதாக மத்திய உளவு துறைக்கு கிடைத்த ரகசிய  தகவலை தொடர்ந்து, கேரள கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு  வளையத்திற்குள்  கொண்டு வரப்பட்டுள்ளது.
 இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 256 பேர் கொல்லப்பட்டனர். இதனால், தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டது. கேரளா,  தமிழகத்தில் ேதசிய புலனாய்வு  அமைப்பினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ேகரளாவில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவில் ஐஎஸ்  தீவிரவாதிகள் தற்கொலைப் படை  தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பது  தெரியவந்தது.

மேலும், இலங்கையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட  ‘சாத்தானின் தாய்’ என்று அழைக்கப்படும் பயங்கர வெடிபொருள் கேரளாவுக்கு கொண்டு  வரப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கேரளாவில் தேசிய புலனாய்வு  அமைப்பு மற்றும் உளவுத்துறை போலீசார் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், இலங்கையில்  இருந்து கேரளா, லட்சத்தீவை நோக்கி 15 பேர் அடங்கிய ஐஎஸ்  தீவிரவாதிகள் குழு, படகில் புறப்பட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு  ரகசிய தகவல் கிடைத்து–்ள்ளது. இதையடுத்து, கேரள கடலோர  மாவட்டங்களில் உள்ள அனைத்து  மாவட்ட எஸ்பி.க்களுக்கும், கடலோர பாதுகாப்பு படை ஏடிஜிபி அவசர சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார்.

அதில், ‘கேரள கடல்  எல்லை வழியாக லட்சத்தீவில் உள்ள  மினிகாய் நோக்கி ஒரு வெள்ளை நிற படகில் 15 ஐஎஸ் தீவிரவாதிகள் செல்ல  திட்டமிட்டுள்ளனர். எனவே, கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியை  தீவிரப்படுத்த  வேண்டும். மேலும், மீனவர்கள், கடலோர  பாதுகாப்பு படைக்கும் இத்தகவலை தெரிவிக்க ேவண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கேரள கடல் எல்லை  முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.



Tags : terrorists ,India ,Sri Lanka ,Kerala Sea , India, Boat , Sri Lanka, ISS terrorists
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...