17வது மக்களவை தேர்தலில் பெண் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்வு

புவனேஸ்வர்: 17வது  மக்களவைக்கு நடந்த தேர்தலில், போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் வெற்றி பெற்ற  சதவீதத்தை வைத்து கணக்கிடும் போது ஆண்களை விட பெண்களே அதிக சதவீதம் பெற்று  முன்னணியில் உள்ளனர். பாஜ சார்பில் 54 பெண்கள் போட்டியிட்டனர்.  இதில் 40 பேர் வெற்றி பெற்றனர். அதாவது 74.1% வெற்றி கிடைத்துள்ளது. இதே பாஜ கட்சியில் ஆண்களின் வெற்றி சதவீதம் 68.8  சதவீதமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரசை எடுத்துக்கொண்டால் பெண்  வேட்பாளர்களின் வெற்றி சதவீதம் 52.9 சதவீதமாக உள்ளது. இவர்களை விட சற்று  குறைவான சதவீதத்தில் ஆண் வேட்பாளர்கள் உள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக  ஆகிய கட்சிகளில் நிறுத்தப்பட்ட அனைத்து பெண் வேட்பாளர்களும் வெற்றி வாகை  சூடியுள்ளனர். இதற்கு நேரெதிராக காங்கிரசில் பெண் வேட்பாளர்கள் குறைந்த  சதவீதத்தில்தான் வெற்றி பெற்றுள்ளனர். இதுரை இல்லாத அளவில் அதிகமாக 78  பெண் எம்பி.க்கள் 17வது மக்களவைக்குள் நுழைகின்றனர். இவர்களில் 30 பேர் ஒரு  லட்சம் அல்லது அதற்கு மேல் வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்.சுல்தான்பூரில் வெற்றி பெற்ற மேனகாகாந்தி மட்டுமே 14,500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிஜூ ஜனதா தளம் சார்பில் கோன்ஜார் தொகுதியில்  இருந்து தேர்வான 25 வயதான சந்திரானி முர்மு இளம் ெபண் எம்பி என்ற  பெருமையை பெற்றுள்ளார். 12 இடங்களை கைப்பற்றிய பிஜூ ஜனதா தளம்  கட்சியில் 5 பேர் பெண்கள். பாடியாலாவில் தேர்வாகியுள்ள  74 வயதான காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கவுர் மூத்த பெண் எம்.பி. ஆவார்.

Related Stories: