தென்னாப்பிரிக்கா அதிபராக ரமபோசா பதவியேற்பு

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா மீது எழுந்த ஊழல் புகார்களைத் தொடர்ந்து கடந்தாண்டு அவர் பதவி விலகினார். இதையடுத்து சிரில் ரமபோசா அதிபரானார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி பொது தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றது. இதனால் மீண்டும் ரமபோசாவின் பெயர் அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்றார்.

× RELATED தென்னாப்பிரிக்க அதிபருடன் ராகுல்காந்தி, மன்மோகன் சந்திப்பு