சில்லி பாயின்ட்...

* இலங்கை ஏ அணியுடன் பெல்காமில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் (அங்கீகாரமற்றது), டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 376 ரன் குவித்துள்ளது. பாஞ்ச்சால் - ஈஸ்வரன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 352 ரன் சேர்த்து அசத்தியது. கேப்டன் பாஞ்ச்சால் 160 ரன் (261 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஈஸ்வரன் 189 ரன் (250 பந்து, 17 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெயந்த் யாதவ் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

* இங்கிலாந்து அணியுடன் சவுத்தாம்ப்டனில் நேற்று நடந்த உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மித் 116 ரன் (102 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். வார்னர் 43, ஷான் மார்ஷ் 30, கவாஜா 31, அலெக்ஸ் கேரி 30 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் லயம் பிளங்க்கெட் 4, மார்க் வுட், டாம் கரன், டாவ்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

Related Stories: