×

2019 ஏப்ரலில் விற்பனையான டாப் 5 கார்கள்

இந்திய கார் பிரியர்கள் மத்தியில் எஸ்யூவி ரக கார்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதனால்  பொதுவாக எஸ்யூவி ரக கார்கள் சிறப்பான விற்பனையை அடையும். அவ்வகையில் இந்தாண்டு கடந்த ஏப்ரல் மாதம் இந்திய வியாபார சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர்,  மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஜீப் காம்பஸ் மற்றும் ரெனால்ட் டஸ்ட்டர் ஆகிய  எஸ்யூவி ரக கார்கள் சிறப்பான விற்பனையை பதிவுசெய்துள்ளன. இதில் அதிகபட்சமாக  ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி ரக கார் விற்பனையாகியுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யூவி ரக கார் கிரெட்டா. இது, எடை குறைவாகவும், நல்ல பிக்கப் அளிப்பதாலும் வாடிக்கையாளர்களை மிகவும்  கவர்ந்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டாவின் சக்திவாய்ந்த 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்  அதிகபட்சமாக 128 பிஎஸ் பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை வழங்குகிறது.  மேலும், இது, 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கிறது. ₹13.59 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை  செய்யப்படும் கிரெட்டா எஸ்யூவி ரக கார், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10,487  யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.

Tags : 5 cars sold in April 2019...
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...