டீசல் இன்ஜினில் வெளிவருகிறது டாடா அல்ட்ராஸ்

புதிய டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், சிறிய வகை டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியை நிறுத்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் இன்ஜின் தேர்வில்தான் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டாடா அல்ட்ராஸ் காரில் பயன்படுத்தப்பட இருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்பதது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் பின்னர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. நெக்ஸான் எஸ்யூவி ரக காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன், அல்ட்ராஸ் காரிலும் இடம்பெறும். இந்த இன்ஜின் 100 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் டியூனிங் செய்யப்பட்டு இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல் மாடல் சற்று கால தாமதப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டாலும், சில விசேஷ தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது. ஆம், பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுக்கும் வாய்ப்புள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையின் அடிப்படையில் அல்ட்ராஸ் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஹாரியருக்கு அடுத்து டாடா நிறுவனத்தின் அல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது கார் மாடல் இது ஆகும். இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட், 16 அங்குல அலாய் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். வரும் ஜூலை மாதம் புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார்களுடன் இது போட்டி போடும். போட்டியாளர்களைவிட குறைவான விலையில் வரும் வாய்ப்புள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: