×

வருகிறது புதிய விட்டாரா

இந்திய மார்க்கெட்டில், கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது விட்டாரா. அப்போது முதல் விட்டாரா பிரெஸ்ஸா கார் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்கூட 11,785 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9 சதவீத வளர்ச்சி ஆகும். இதன்மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை விட்டாரா பிரெஸ்ஸா பெற்றுள்ளது. ஆனால், விட்டாரா பிரெஸ்ஸா காரில், மாருதி சுஸுகி நிறுவனம் டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வருகிறது. இந்த சூழலில் தனது அனைத்து டீசல் கார்களின் உற்பத்தியையும் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த உள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கு, மிக விரைவில் வர உள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளே காரணம். மிக கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப டீசல் இன்ஜின்களை மேம்படுத்துவதற்கு அதிக செலவு ஆகும் என்பதால்தான் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே விட்டாரா பிரெஸ்ஸா காரின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்தது.
தற்போது இந்திய மார்க்கெட்டில் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. அனேகமாக,  2020ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பாக விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ெதரிகிறது.

புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வேகன் ஆர் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் விட்டாரா பிரெஸ்ஸா காரிலும் வழங்கப்பட உள்ளது.இந்த இன்ஜின் தற்போதைய நிலையில் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடிய வகையில் உள்ளது. பிஎஸ்-6 மாசு விதிகளுக்கு ஏற்ப இந்த இன்ஜின் அப்டேட் செய்யப்பட உள்ளது. அத்துடன், இன்னும் அதிகமான சக்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்த இன்ஜினை மாருதி சுஸுகி, டியூன் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் காரிலும் இதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களைத்தான் மாருதி சுஸுகி வழங்கும் என தெரிகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் கார், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் போர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற இதர காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுடன் போட்டி போடும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags : Brassza Car, Maruti Suzuki
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...