டிக்கி நினைவு கோப்பை கிரிக்கெட்: திருவள்ளூர் அணி சாம்பியன்

சென்னை: சென்னையில் நடைபெற்ற 14வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 21வது டிக்கி நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் ேபாட்டியில் திருவள்ளூர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் எப்எஸ்சிஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய திருவள்ளூர் டிசிஏ அணி 30 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. நிர்மல்குமார் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். எப்எஸ்சிஏ தரப்பில் வினீத், பூஜித், அரவிந்த கிருஷ்ணன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய எப்எஸ்சிஏ அணி 30 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெறும் 60 ரன்கள் மட்டுமே சேர்த்தது. திருவள்ளூர் அணி வீரர்கள் கிரண் கார்த்திகேயன் 3 விக்கெட்களும், அரவிந்த் கிருஷ்ணா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டத்தின் சிறந்த வீரராக கிரண் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார். தொடரின் சிறந்த ஆட்டக்காரராக ஜெயந்த்(எலைட் சிஏ), பந்து வீச்சாளராக சஞ்ஜெய்(எப்எஸ்சிஏ), நம்பிக்கை நட்சத்திரமாக விஷால் ராம்(சிஎஸ்எஸ்எப்-ஏ), ஆல் ரவுண்டராக ஹர்ஷா(திருவள்ளூர் டிசிஏ) ஆகியோரும், பக்‌ஷிராஜ் நினைவு விருதுக்கு வர்ஷித், தொடர் நாயகன் விருதுக்கு நிர்மல்குமார்(திருவள்ளூர் டிசிஏ) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். சாம்பியன் பட்டம் வென்ற திருவள்ளூர் அணிக்கும், சிறந்த வீரர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை கிரிக்கெட் வீரர் பாபா அபரஜித் வழங்கினார்.

Related Stories: