18வது ஆண்டு தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,  இந்தியா விளையாட்டு மேம்பாட்டு அகாடமி , வனவானி பள்ளி ஆகியவை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் தடகள பயிற்சி முகாமை நடத்துகிறது. இந்த ஆண்டு நடைப்பெற்ற 18ம் ஆண்டு முகாம்  கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா வளாகம், ஐஐடி வனவானி  பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் நடைப்பெற்றது. இதன் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய கலால் வரி தீர்வு ஆணையர் சி.பி.ராவ்  சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கே.வைத்தியநாதன், அகாடமி இயக்குநர்கள் ஆர்.எம்.லட்சுமணன், ஆர்.நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி முகாமில்  சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகள் விவரம்: எஸ்.டி.ஏ.டி. நேரு பூங்கா வளாகம்:  பி.ஏ.பிரஜ்னா, ஆர்.கோகுல், எம்.திவ்யதர்ஷினி, என்.செந்தில்ரத்தினம், எம்.மணிஷா, ஜோன்ஸ்ஜோஷ்வா, அக்ஷயா, மிலானோ செலஸ்டின் ஐவர்ஸ், மெக்லெய்ன், எஸ்.தினேஷ். வனவானி பள்ளி வளாகம்:  வி.திஷிதா, எம்.சாய் விஜய், எம்.எஸ்.தியா, கே.ஆர்.ஈஷ்வர்தாத், டி.வி.ஷ்ரியா, சி.கார்முகில், வி.பவதாரிணி, கே.ஆர்.அரவிந்த் ஆகாஷ், ஸ்மிதி ஆர்.தேசாய், ஆர்.விஷால், எம்.மகேஸ்வரி, ஏ.யுவராஜ்.

Related Stories: