ஆக்கிரமிப்பை தடுக்க தவறியதாக திரிசூலநாதர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை: ஆக்கிரமிப்பை தடுக்க தவறியதாக செயல் அலுவலர் சத்யநாராயணனை  சஸ்பெண்ட் செய்தும், மற்றொரு செயல் அலுவலரை பதவி இறக்கம் செய்தும் இந்து அறநிலையத் துறையின் கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சென்னை அருகே திரிசூலத்தில் திருசூலநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோயில்களுக்கு சொந்தமாக பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பல நூறு ஏக்கர் நிலங்கள் தனியாரின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த நிலங்களை மீட்க போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க கோரி ேகாயில் செயல் அலுவலர் சத்யநாராயணனுக்கு அறநிலையத்துறை தலைமை உத்தரவிட்டது. ஆனால், அவர், ஆக்கிரமிப்பை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்ைல என்று தெரிகிறது. மேலும், சத்யநாராயணன், கோயில் நிர்வாக பணிகளை கவனிப்பதில்லை என்றும், அவர் கோயிலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு, அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

 

இந்த நிலையில் அவர் மீது கோயில் ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கோயிலுக்கு முறையாக செல்வதில்லை என்றும் அறநிலையத்துறை தலைமைக்கு புகார் சென்றது. இந்த புகாரின் பேரில் செயல் அலுவலர் சத்யநாராயணனை சஸ்பெண்ட் செய்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் பணிபுரிந்த போது ஏற்பட்ட நிர்வாக  குறைபாடுகளுக்காக செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் மீது இணை ஆணையரால் தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிககையில் செயல் அலுவலர் 1 என்ற நிலையில் செயல் அலுவலர் 2 என்ற நிலையில் இரண்டாண்டுகளுக்கு பதவி இறக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. எனவே,செயல் அலுவலர் 2ம் நிலையிலான நாகப்பட்டினம் திருக்குவளை அருகே வலிவலம் இருதயகமலநாத சுவாமி கோயிலில் பணி நியமனம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உட்பட சென்னையில் பல முக்கிய கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பை தடுக்க தவறியதாக செயல் அலுவலர் சத்தியநாராயணன் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் செயல் என்று செயல் அலுவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: