பவர் ஸ்டார் ‘670’ சினிமா அல்ல வாங்கிய ஓட்டு

சென்னை: தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் னிவாசன் 670 ஓட்டு மட்டுமே வாங்கி தோல்வியடைந்துள்ளார். நகைச்சுவை நடிகரும், மருத்துவருமான பவர் ஸ்டார் னிவாசன் தென்சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். இந்தநிலையில், 23ம் தேதி வெளியான தேர்தல் முடிவின் படி தென்சென்னை தொகுதியில் 22 சுற்றுவாக்கு எண்ணிக்கையின் முடிவில் 670 வாக்குகள் மட்டுமே அவர் பெற்றார்.
தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில் வீதி, வீதியாக சென்று நகைச்சுவை செய்து வினோதமாக ஓட்டு கேட்டார். கண்டிப்பாக தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வேன், நடிகன் என்பதால் மக்களிடம் விரைவில் நான் சென்றடைவேன் என்றும் கூறினார். ஆனால், வெறும் 670 வாக்குகள் மட்டுமே பெற்று பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.


Tags : drive , Power Star, Cinema, Drive
× RELATED மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளான...