முதல்வர் பதவியில் இருந்து விலக விரும்பினார் மம்தா தடுத்தது திரிணாமுல்

கொல்கத்தா: மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதை, கட்சி நிராகரித்து விட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.  மக்களவை தேர்தலில் திரிணாமுல் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 42 இடங்களில் 18 இடங்களை பாஜ வென்றது. இந்த பின்னடைவு குறித்து ஆராய திரிணாமுல் மூத்த தலைவர்கள் கூட்டத்தை மம்தா நேற்று நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘முதல்வர் பதவியில் தொடர விரும்பவில்லை என நான் கூறினேன். ஆனால், எனது கோரிக்கையை கட்சி ஏற்கவில்லை. மேற்கு வங்கத்தில் அவசர நிலை போன்ற சூழலை மோடி அரசு ஏற்படுத்தி விட்டது. எனது கட்சிக்கு எதிராக மத்தியப் படைகள் செயல்பட்டன. தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை,’’ என்று கூறினார்.

Related Stories: