×

3 நதிகள் இணைப்பு: நிதின் கட்கரி உறுதி

புதுடெல்லி: ‘கங்கா - கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்தால், காவிரியும் இணையும்’ என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.  மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜ கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது.  இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேர்தல் வெற்றி குறித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: எங்களது முதலாவது ஆட்சி காலத்தில், தேசம் முழுதும் நெடுஞ்சாலைகளை இணைத்து இந்தியா அனைவருக்கும் ஒன்று காட்டினோம். அடுத்து இனி வரும் 5 ஆண்டு காலத்தில், எப்படியேனும், நதிகளை தேசியமயமாக்கி, கங்கா- கோதாவரி  கிருஷ்ணா நதிகளை இணைத்தால், காவிரியும் இணையும். இதனால் நாடு மட்டுமின்றி, குறிப்பாக தமிழ்நாட்டின் நெடு நாளைய நீர் பிரச்னை தீர்ந்து, விவசாயமும், நீர் வளமும் செழித்து, தமிழர்கள் நிரந்தர பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Nitin Gadkari , 3 rivers, Nitin Gadkari
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை...