புதிய விடியல் பிறந்துள்ளது: ஸ்மிருதி நன்றி

அமேதி:  உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவை  தொகுதி காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்டது. இந்த தொகுதியில்  மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பின் 1998ம் ஆண்டு அமேதியை பாஜ கைப்பற்றியது. 1999ம்  ஆண்டு நடந்த தேர்தலில் பாஜவிடம் இருந்து அமேதியை சோனியா கைப்பற்றினார்.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து அமேதியை ராகுல் காந்தி தன்வசம் வைத்திருந்தார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவரை எதிர்த்து பாஜ சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். அவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 903 வாக்குகள்  வித்தியாசத்தில் தோற்கடித்து 3வது முறையாக இங்கு ராகுல் எம்பி.்யானார். 4வது முறையாக மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்ட அவரை, 52,120 வாக்கு வித்தியாசத்தில் அதே ஸ்மிருதி இரானி நேற்று தோற்கடித்தார்.இதையடுத்து, தன்னை வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு ஸ்மிருதி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அமேதிக்கு புதிய விடியல் ஏற்பட்டுள்ளது. புதிய உறுதியை தந்துள்ளது. அமேதி மக்களுக்கு நன்றி.  வளர்ச்சியின் மீதான நம்பிக்கையை காட்டியுள்ளீர்கள். தாமரை மலர உதவியுள்ளீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: