பெண்கள் டி20 தென் ஆப்ரிக்கா அதிரடி வெற்றி

பெனோனி: தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் 3-2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.பாகிஸ்தான் பெண்கள் அணி  தென் ஆப்பிரிக்காவில் 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற டி20கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் 2-2 என்ற  கணக்கில் சமநிலயில் இருந்தன.இந்நிலையில் கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெனோனியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் களமிறங்கிய பாகிஸ்தான்  அணி 20ஓவர்கள் முடிவில் 5  விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. ஜவேரியா கான்-20, கேப்டன் பிஸ்மா மரூப்-23, நிடா தர்-28 ரன்களும்,  அலியா ரியாஸ் ஆட்டமிழக்காமல் 26 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்ரிக்கா  தரப்பில் மோசேலின் டேனியல்ஸ், ஷப்னிம் இஸ்மாயில்,  சுனே லுவுஸ், டுமி செகுகூனே, நடைன் டீ கிளார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 15.1ஓவர்களில் ஒரு விக்ெகட் மட்டுமே இழந்து 127 ரன்களை எடுத்தது. அதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில ்பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் 3-2 என்ற  கணக்கில் தொடரையும் தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது.லிஸ்ெஸலி லீ 75 ரன்களுடனும், நடைன் டீ கிளார்க் 37 ரன்களுடனும் ஆட்டமிழக்கமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில்  நிடா தர் மட்டும் ஒரு விக்கெட்டை எடுத்தார். தென் ஆப்ரிக்காவின் லிஸ்ெஸலி லீ ஆட்டநாயகியாக தேர்வு  செய்யப்பட்டார்.

Related Stories: