தோல்வி பற்றி ஆலோசிக்க காங். காரியக் கமிட்டி டெல்லியில் கூடுகிறது: ராகுல் ராஜினாமா?

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பாஜ பெரும்பான்மை பெற்றது. ஓரிரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. பிற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதற்கு, ராகுல் தலைமை வகிக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சித் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ய முன்வருவார் என கருதப்படுகிறது. ஆனால், கட்சி வட்டாரங்கள் இதை மறுத்துள்ளன.

Related Stories: