×

தோல்விக்கு பொறுப்பேற்று உபி. ஒடிசா காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

லக்னோ: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தர பிரதேசம், ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றார்.

பாஜ, அதன் கூட்டணி கட்சிகள் 64 இடங்களை கைப்பற்றியுள்ளன. கட்சியின் மாநில தலைவரான ராஜ் பாப்பர், பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இவர், பாஜ வேட்பாளர் ராஜ்குமார் சாகரிடம் 4 லட்சத்து 95 ஆயிரத்து 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், உபி.யில் கட்சி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராஜ்பாப்பர் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் பாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஒடிசாவில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மற்றும் 9 சட்டப்பேரவை  தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நிரஞ்சன் பட்நாயக்  ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “ஒடிசாவில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளேன்,” என்றார்.


Tags : Orissa Congress ,leaders , Failure, responsibility Odisha, Congress leaders, resign
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...