×

ஜெய்ப்பூர் அரச வம்சத்தில் எம்பி.யான தியா குமாரி

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் தியா குமாரி மக்களவை எம்பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அரச குடும்பத்தை சேர்ந்த 2வது எம்பி. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் காயத்ரி தேவி. ஜெய்ப்பூரின் ராஜமாதா என அழைக்கப்பட்ட இவர், ஜெய்ப்பூர் எம்பி.யாக கடந்த 1962, 1967, 1971 ஆகிய மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.

இவரை 10 மிக அழகான உலகப்பெண்களில் ஒருவராக பிரபல பேஷன் இதழ் ஒன்று தேர்வு செய்தது. இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து காயத்ரி தேவியின் வளர்ப்பு மகன் பவானி சிங்கும் கடந்த 1987ல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பவானி சிங்கின் மகள் தியா குமாரி (48)  பாஜ சார்பில் போட்டியிட்டார்.

ராஜ்மந்த் தொகுதியில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் வேட்பாளர் தேவ்கி நந்தனை 5.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த 2வது பெண் எம்பி என்ற பெருமை தியா குமாரிக்கு கிடைத்துள்ளது. முன்னதாக தியாகுமாரி கடந்த 2014ம் ஆண்டு சவாய்மாத்பூர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார்.


Tags : Dia Kumari MP ,Jaipur , Jaipur, royal dynasty, MB, Dia Kumari
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...