அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 206 கோடி டாலர் சரிந்து, ரூ.41,800 கோடி டாலராக ஆனது. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு ரூ.42,006 கோடி டாலராக இருந்தது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு சரிந்ததே இதற்கு காரணம். மேற்கண்ட வாரத்தில் வெளிநாட்டு கரன்சி மதிப்பு 39,223 கோடி டாலரில் இருந்து 39,020 கோடி டாலராக சரிந்துள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் டாலரின் வெளி மதிப்பில் கணக்கிடப்படுகின்றன. எனவே டாலரில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கையிருப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தங்கம் கையிருப்பு மாற்றமின்றி 2,302 கோடி டாலராக நீடிக்கிறது. சர்வதேச நிதியத்தில் கையிருப்பு 333.4 கோடி டாலராக சரிந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories: