×

இதுக்கு மேல போனா வேலைக்கு ஆகாது...! 2 கம்யூ. கட்சிகளை இணைக்க அழைப்பு

ஐதராபாத்: ‘‘மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வியால் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது,’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த மக்களவை தேர்தலில், தனது 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் முறையாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றியிருப்பது, அது படுபாதளத்தை நோக்கி செல்வதை காட்டுகிறது.

கடந்த 1952ம் ஆண்டு முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட போது 22 இடங்களில் வென்ற அக்கட்சிகள், 2004 பொதுத்தேர்தலில் 59 தொகுதிகளை வென்று கூட்டணி அரசின் முக்கிய அங்கமாக பங்கு வகித்தன. பின்னர், 2009ம் ஆண்டில் 24 இடங்களைப் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், 2014ல் சரி பாதியான 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இந்நிலையில், தற்போதைய மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 273 தொகுதிகளில் போட்டியிட்டு தமிழ்நாட்டில் 4, கேரளாவில் ஒன்று என்ற ஒற்றை இலக்கத்தில் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன. மேற்கு வங்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வரை, ஏறக்குறைய 34 ஆண்டுகள் தனிப்பெரும் ஆளும் கட்சியாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த 8 ஆண்டுகளில்  அங்கு தனக்கிருந்த செல்வாக்கில் மாபெரும் சரிவை கண்டுள்ளது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி நேற்று அளித்த பேட்டியில், ‘‘மார்க்சிஸ்ட் எங்களுடன் இணைய வேண்டும் என எப்போதுமே கூறி வருகிறேன். தற்போது அதற்கான நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன். ஆனால், இது ஒன்று மட்டுமே தீர்வு என்று கூற மாட்டேன். அதேசமயம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவும். இரு கட்சியினரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும்.

இணைப்பு உடனடியாக சாத்தியானால் மிகவும் நல்லது,’’ என்றார். மே.வங்கத்தில் டெபாசிட் இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா மாநிலங்களில் இக்கட்சிகள் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளன. இம்முறை மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் கூட இக்கட்சிகள் வெற்றி பெறவில்லை. அதை விட ஒருபடி மேலாக, இங்கு போட்டியிட்ட ஒரு தொகுதியை தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளன.

Tags : parties , And above that, it's not going to work ...! 2 km. Parties, to call
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...