18 மாநிலங்களில் காங்கிரஸ் ஜீரோ

புதுடெல்லி: காங்கிரஸ் கடந்த பொதுத்தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. அதேபோன்று தற்போதை மக்களவைத் தேர்தலிலும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளதால் இம்முறையும் எதிர்கட்சி அந்தஸ்து கை நழுவியுள்ளது. இந்த இடங்களில் பெரும்பாலான இடங்கள், தமிழ்நாடு, கேரளாவில் இருந்து கிடைத்துள்ளது.

ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், தாதர் நாகர் ஹவேலி, டாமன் டையூ, குஜராத், அரியானா, இமாச்சல், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனால், இம்மாநிலங்களில் பாஜ.வின் வாக்கு வங்கி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு காங்கிரசிடம் பறி கொடுத்த மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாஜ. அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரசின் தோல்வி முகம் அங்கும் தொடர்கதையாகி உள்ளது. அதேபோல், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, சிக்கிம், அந்தமான், தாதர் நாகர் ஹவேலி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் பாஜ.வும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: