ராபர்ட் வதேராவின் ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத் துறை மனு

புதுடெல்லி: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கில் ராபர்ட் வதேராவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில்  ரூ.18 கோடியில் சொத்துகளை வாங்கினார். இதில்  சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோர் மீது குற்றம்  சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக டெல்லி நீதிமன்றத்தில் வதேரா முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திடீரென மனு தாக்கல் செய்துள்ளது. அதில், வதேரா ஜாமீனில் இருப்பதால் வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம் என்று அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது.

Related Stories: