முதல்வரின் சொந்த ஊரிலும் திமுகவுக்கு அதிக ஓட்டு

இடைப்பாடி: ேசலம் நாடாளுமன்றத் ேதர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திலும் திமுக வேட்பாளர் பார்த்திபன் அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார். இது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. சேலம் நாடாளுமன்றத் ெதாகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட பார்த்திபன் 6,06,302 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் 4,59,376 வாக்குகள் பெற்றார். இந்த வகையில் 1,46,926 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதிமுகவினர் பணியாற்றினர். ஆனால் திமுகவின் அபார வெற்றி, அவர்களை மலைக்க வைத்தது.

நாடாளுமன்றத் தொகுதியை பிடிக்க முடியாவிட்டாலும், இடைப்பாடி சட்டசபை தொகுதியில் அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிமுகவினருக்கு ஏமாற்றமாகி விட்டது. இடைப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபனுக்கு கிடைத்த வாக்குகள் 1,04,573. அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு 96,485 வாக்குகள் கிடைத்தது. இது ஒருபுறமிருக்க முதல்வரின் சொந்த ஊரான சிலுவம்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த 4 வாக்குசாவடிகளில் திமுகவிற்கே அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. இது அதிமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பூமணியூர் (170), கோனேரிப்பட்டி (171), சிலுவம்பாளையம் (172), காட்டூர்கோட்டமேடு (173) என்று நான்கு இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பூமணியூர் மையத்தில் மொத்த வாக்குகள் 1,111. பதிவான வாக்குகள் 946. இதில் திமுக வேட்பாளர் பார்த்திபனுக்கு 543 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு 229 வாக்குகளும் கிடைத்தது. கோனேரிப்பட்டி மையத்தில் மொத்த வாக்குகள் 1937. பதிவான வாக்குகள் 887. இதில் அதிமுக வேட்பாளருக்கு 461 வாக்குகளும், திமுக வேட்பாளருக்கு 368 வாக்குகளும் கிடைத்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்த சிலுவம்பாளையம் மையத்தில் மொத்தம் 1,089 வாக்குகள் உள்ளது. பதிவான வாக்குகள் 954. இதில் அதிமுக வேட்பாளருக்கு 679 வாக்குகளும், திமுக வேட்பாளருக்கு 221 வாக்குகளும் கிடைத்தது.  காட்டூர் கோட்டமேடு மையத்தில் உள்ள வாக்குகள் 1,121. பதிவான வாக்குகள் 902. இதில் திமுக வேட்பாளருக்கு 637 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 212 வாக்குகளும் கிடைத்தது. இங்கு 2மையங்களில் மட்டுமே அதிமுகவுக்கு கூடுதல் ஓட்டு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் மொத்தமாக 4 மையங்களிலும் திமுகவுக்கு 1,769 வாக்குகள் கிடைத்துள்ளது. அதிமுக வேட்பாளர் 1581 வாக்குகள் பெற்றுள்ளார். இது திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளைவிட 188 வாக்குகள் குறைவாகும். முதல்வரின் சொந்த ஊரில் கூட, அதிக ஓட்டுக்களை ெபற முடியாதது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: