மெகா கூட்டணி அமைத்தும் பா.ம.கவின் கோட்டையில் ஓட்டை விழுந்தது எப்படி?

விழுப்புரம்: மெக கூட்டணி அமைத்தும் பாமகவின் கோட்டையில் இந்த தேர்தலில் பெரும் ஓட்டை விழுந்தது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் முதலில் கூட்டணி சேர்ந்தது பாமகதான். அடுத்து பாஜக, கடைசி நேரத்தில் தேமுதிகவும் இணைந்தது. அதிமுகவினர் மெகா கூட்டணி அமைத்துவிட்டோம் என்ற ஆர்பரிப்பில் தேர்தலை சந்தித்தனர். அதிமுக கூட்டணியில் எளிதாக வெற்றிபெற வன்னியர்கள் அதிகமுள்ள தொகுதிகளை கேட்டுபெற்ற பாமக குறைந்தது 5 இடங்களிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும், குறிப்பாக சொந்தமாவட்டமும், பாமகவின் கோட்டையாக அவர்களால் கருதப்படும் விழுப்புரம் தொகுதியை எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். இதற்காக ராமதாஸ் விழுப்புரத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக்கூட்டத்திலேயே எல்லா பொறுப்புகளையும் அமைச்சர் சண்முகத்திடம் ஒப்படைத்துவிட்டேன். எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என்று கூறிவிட்டுச் சென்றார். ராமதாசின் பேச்சு பாமகவினரிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. பாமகவில் மூத்த நிர்வாகிகள் விழுப்புரம் தொகுதியில் இருந்தும் அனைத்து முக்கியத்துவமும் அதிமுக அமைச்சருக்கு வழங்கப்பட்டது. அமைச்சரும், தன் கட்சியினர் வழியாகவே அனைத்து பணிகளையும்  மேற்கொண்டாராம். பாமகவினரை அருகில் கூட சேர்க்கவில்லை,  ஒரு பைசா கண்ணில் காட்டவில்லை என்ற பேச்சும் அடிபட்டது.

வாசன் பிரச்சாரத்துக்கு வந்தபோதும் பாமக வேட்பாளரோ, முக்கிய நிர்வாகிகளே செல்லவில்லை என்று கூறப்பட்டது. இப்படி சொந்தகட்சிக்காரங்களே உள்ளடி வேலையில் ஈடுபட்டதால் போன்மூலம் தொடர்பு கொண்ட ராமதாஸ் கட்சியினரை கடிந்து கொண்டார். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு வாக்குப்பதிவின்போது சொந்தகட்சிக்காரங்களே உள்ளடி வேலையில் ஈடுபட்டார்களாம். அதே போல் மெகா கூட்டணியில் உள்ள தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் மற்றொருபக்கம் உள்ளடி வேலையை காட்டியது தோல்விக்கு காரணம் காரணமாக கூறப்படுகிறது. இனிவரும்காலத்தில் திராவிடகட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கூறிவிட்டு கடந்த சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுடனும், பின்னர் கூட்டணி முறிவு ஏற்பட்டு மீண்டும் அதிமுகவுடனும் பாமக கூட்டணி அமைத்ததற்கு ஆரம்பத்திலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழகத்தில் பாஜகவுடன் கைகோ ர்த்த அதிமுகவிற்கு எதிரான அலைஅடிப்பது தெரிந்தும் பாமக வலியச்சென்று சிக்கிக்கொண்டது.

Related Stories: