குழந்தைகள் விற்பனை வழக்கு புரோக்கர்களுக்கு ஜூன் 6 வரை காவல் நீட்டிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், சட்ட விரோதமாக பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் நர்ஸ் அமுதவள்ளி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார், திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை  சிபிசிஐடி போலீசார் காவலில் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள புரோக்கர்கள் அசீனா, பர்வின், லீலா, சாந்தி, செல்வி, முருகேசன், அருள்சாமி ஆகிய 7 பேரின் நீதிமன்ற காவல், நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார், 7 பேரையும் நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வடிவேல், புரோக்கர் அசீனா உள்ளிட்ட 7 பேரின் நீதிமன்ற காவலை, வரும் ஜூன் 6ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Related Stories: