மக்களவை தேர்தலில் சாதனை 5.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் தி.மு.க. வேட்பாளர் வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி 5 லட்சத்து 38 ஆயிரத்து 972  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்திலேயே முதலிடம் பிடித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப். 18ல் நடந்தது. நேற்று முன்தினம் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்றிலேயே 24 ஆயிரத்து 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் திமுக வேட்பாளர் வேலுச்சாமி முன்னிலையில் இருந்தார். 23வது சுற்று முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவைவிட 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது தமிழகம், புதுச்சேரியில் நடந்த மக்களவை தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாச வெற்றிகளில் முதலிடமாகும். இரண்டாவது இடத்தில் பெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்தை விட 5 லட்சத்து 7 ஆயிரத்து 955 ஓட்டுக்கள் அதிகம் பெற்றுள்ளார்.

Related Stories: