×

மஞ்சூர் அருகே மலைப்பாதையில் விபத்து: கேஸ் சிலிண்டர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

மஞ்சூர்: மஞ்சூர் அருகே மலைப்பாதையில் கேஸ் சிலின்டர்கள் ஏற்றி சென்ற லாரியும், காரும் மோதி விபத்துள்ளானது.  நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் கேஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு கோவையில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி ஓணிகண்டியில் உள்ள கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்கள் இறக்கியபின் கிடங்கில் இருந்து நேற்று காலி சிலிண்டர்களை ஏற்றி கொண்டு மீண்டும் கோவைக்கு சென்றது.

வழியில் கோடேரி என்ற இடம் அருகே மலைப்பாதையில் சென்றபோது நிைல தடுமாறி லாரி சாலையோரம் பள்ளத்தில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தின்போது எதிரே வந்த கார் மீது மோதியதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினார்கள். இந்த விபத்தால் மஞ்சூர் குன்னுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : accident ,mountain ,Manchur , Manchur, mountain pass, accident, gas cylinder lorry
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...