×

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு இடையூறு குடிநீர் வடிகால் வாரியம் மீது குற்றச்சாட்டு

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் முளகுமூடு தேசிய நெடுஞ்சாலையில் இரட்டான்விளை அருகே ஆபத்தான வளைவு பகுதியில் பக்கச்சுவர் கட்டி சாலையை விரிவாக்கம் செய்யவும், மழைநீர் வடிகால் ஓடை அமைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பக்கச்சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தற்போது வடிகால் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. ஆனால் அப்பகுதிகளில்  பத்மநாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற பெயரில் சாலையோரங்களில் இடையூறாக பெரிய பெரிய குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன.

மேலும் பல வடிகால்கள் ஆக்ரமிப்பால் மழை நேரங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், இரட்டான்விளையில் வடிகால் தோண்டும் பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்ேப அப்பகுதியில் போடப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்த குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவற்றை அகற்றவில்லை. இதனால் அப்பகுதியில் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் வரும் 3ம் தேதி உயர்நீதிமன்றம் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும்.

அப்போது உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் சேர்க்கப்படுவார்களா  என்பது தெரியவரும். இதுபோல வடிகால் அமைக்க தோண்டப்பட்ட மண் அப்பகுதியில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவை அகற்றப்படாததால் தோண்டப்பட்ட பள்ளம் மூடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Tags : water drainage board , National Highway, Drinking Water Board, Charging
× RELATED குடிநீர் வடிகால் வாரியம், சென்னை...