×

குஜராத் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இன்று மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என சூரத் காவல் ஆணையர் சதீஷ்குமார் மிஸ்ரால தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்:

தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தொடர்ந்து, சூரத் தீ விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும், குஜராத் அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும்படி வலியுறுத்தியுள்ளார்.



Tags : fire ,Surat ,Gujarat , Gujarat Surat, Prime Minister Modi, condolences
× RELATED குஜராத்தில் லேசான நிலநடுக்கம்