வேலூரில் உயர் அதிகாரி சகஊழியரை தாக்கியதால் பரபரப்பு

வேலூர்: வேலூர் திருப்பத்தூரில் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் கிருஷ்ணன்,சக ஊழியர் சிவாஜியை தாக்கியதால் பரபரப்பு நிலவியது. சக ஊழியரான உதவி கணக்கு அலுவலர் சிவாஜி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணன் செய்யும் ஊழலை சிவாஜி தனது செல்போனில் படம்பிடித்ததால் ஆத்திரமடைந்து தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களை கிருஷ்ணன் இழிவாக பேசியதாகவும் தனது செல்போனை பறித்துக்கொண்டதாகவும் சிவாஜி போலீசில் புகார் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: