30 ஆண்டுகளுக்கு பிறகு ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி

தூத்துக்குடி : 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒட்டப்பிடாரத்தில் திமுக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் 1989-ல் திமுக வேட்பாளர் முத்தையா வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா 19,657 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் விவரம் :

எம்.சி. சண்முகையா (திமுக) : 73,241

பெ. மோகன் (அதிமுக) : 53,584

இரா. சுந்தரராஜ் (அமமுக) : 29,228

மு. அகல்யா (நாம் தமிழர்) : 8,666

மு. காந்தி (மநீம) : 1,734

19 ஆண்டுகளுக்கு பின் ஆண்டிபட்டியில் திமுக  :

ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் 19 ஆண்டுகளுக்கு பின் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட மகாராஜன் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிக வித்தியாசத்தில் வென்ற திமுகவினர்  :

திமுக வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். திண்டுக்கல் திமுக வேட்பாளர் வேலுசாமி, பாமக வேட்பாளரைவிட 5,38,972 வாக்குகள் அதிகம் பெற்றார். ஸ்ரீபெரும்புத்தூரில் டி.ஆர் பாலு, பாமக வைத்திலிங்கத்தை விட 5,07.955 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். சென்னை வடக்கு திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4,61,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: