×

2 லட்சத்திற்கும் மேல் வாக்கு திமுக வேட்பாளர்கள் அபாரம்: எதிர்த்து களம் கண்டவர்கள் திணறல்

சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது லட்சக்கணக்கான வாக்குகளை திமுக வேட்பாளர்கள் பெற்றனர். இதனால், அவர்களை எதிர்த்து களம் கண்ட வேற்று கட்சியினர் திணறடிக்கப்பட்டனர்.தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அப்போது, திமுக வேட்பாளர்கள் அனைவரும் லட்சக்கணக்கான வாக்குகளை குவித்து, எதிர்த்து களம் கண்ட மற்ற வேட்பாளர்களை திணறடித்தனர். மத்திய சென்னை தயாநிதி மாறன், அரக்கோணம் ஜெகத்ரட்சகன், ஆரணி விஷ்ணு பிரசாத், வடசென்னை கலாநிதி வீராசாமி, தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன், சிதம்பரம் திருமாவளவன், கோவை நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கடலூர் ரமேஷ், தர்மபுரி செந்தில்குமார், திண்டுக்கல் வேலுசாமி, ஈரோடு கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி பொன் கவுதம் சிகாமணி, காஞ்சிபுரம் செல்வம், கன்னியாகுமரி வசந்தகுமார் (காங்), கரூர் ஜோதிமணி, கிருஷ்ணகிரி செல்லகுமார், மதுரை வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), மயிலாடுதுறை ராமலிங்கம், நாகப்பட்டினம் செல்வராஜ் (கம்யூனிஸ்ட்), நாமக்கல் சின்ராஜ், நீலகிரி ராஜா, பெரம்பலூர் பாரிவேந்தர், பொள்ளாச்சி சண்முக சுந்தரம், ராமநாதபுரம் நவாஸ் கனி (முஸ்லிம் லீக்), சேலம் பார்த்தீபன், சிவகங்கை கார்த்தி சிதம்பரம் (காங்), பெரும்புதூர் டி.ஆர்.பாலு, தென்காசி தனுஷ் எம்.குமார், தஞ்சாவூர் பழனிமாணிக்கம், தேனி ஈவிகேஎஸ். இளங்கோவன், திருவள்ளூர் டாக்டர் ஜெயகுமார் (காங்), தூத்துக்குடி கனிமொழி, திருச்சி திருநாவுக்கரசர், திருநெல்வேலி ஞானதிரவியம், திருப்பூர் சுப்பராயன் (கம்யூனிஸ்ட்), திருவண்ணாமலை அண்ணாதுரை, விழுப்புரம் ரவிக்குமார், விருதுநகர் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) ஆகிய அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அபாரமாக வாக்குகளை குவித்தனர். இவர்களுக்கு மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.   




Tags : voting candidates ,DMK , 2 lakh votes, DMK, candidates ,reputation, protesters ,stuttering
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி