×

ஏ... சிங்கம் போல... காஷ்மீரில் தனித்தே 3 இடங்களில் வெற்றி

காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா, ஜம்மு, ஸ்ரீநகர், உதம்பூர், லடாக் மற்றும் அனந்த்நாக் ஆகிய 6 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் இங்கு பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், 2014 தேர்தலில் லடாக், ஜம்மு, உதம்பூர் தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. அப்போது, மெகபூபா முப்தி கட்சியுடன் பாஜ கூட்டணி அமைத்திருந்தது. இந்த தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜ.வுக்கு இங்கு 2 முதல் 3 இடங்களும், இதே அளவு பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கும் கிடைக்கும். அனந்த்நாக் தொகுதியை பிடிபி.யின் மெகபூபா முப்தியிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த முறை அனந்த்நாக் தொகுதியை தேசிய மாநாட்டு கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தக்கவைத்து கொண்டுள்ளது. இதேபோல், பாரமுல்லா, ஸ்ரீநகர் தொகுதிகளும் இந்த கட்சி வசம் செல்கிறது. தனித்து போட்டியிட்ட பாஜ, ஜம்மு, லடாக் மற்றும் உதம்பூர் தொகுதிகளை தக்கவைத்துள்ளது. மெகபூபா முப்தியும், அவருடைய கட்சியும் தோல்வியை தழுவியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.

Tags : places ,Kashmir , As a lion, in Kashmir, alone, success
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...