×

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வெற்றி

அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் வயநாட்டில் ராகுல் அமோக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் மற்றொரு தொகுதியான அமேதியில் நேற்று வாக்குகள் எண்ணத் தொடங்கியதில் இருந்தே காங்கிரசும், பாஜவும் மாறி மாறி முன்னிலை வகித்தன. ராகுலை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். இங்கு பாஜ வேட்பாளர் ஸ்மிருதி இரானி 3,78,863 வாக்குகள் பெற்றுள்ளார். ராகுல் காந்தி 3,31,305 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற இரானிக்கு ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags : Smriti Irani ,Amethi , Amethi block, Smriti Irani, wins
× RELATED சென்னையில் நாளை வாக்கு சேகரிக்கிறார் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி..!!