ஆட்டோ டிரைவரை வெட்டியவர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரையை சேர்ந்தவர் சுந்தர் (40), ஆட்டோ டிரைவர். கடந்த 21ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டினுள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தூங்கிக் கொண்டு இருந்த சுந்தரை  அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பினார்.  சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அண்ணாநகரை சேர்ந்த ராஜசேகர்  என்கிற  நாகராஜ் (19) என்பவர் சுந்தரை வெட்டியது தெரிந்தது.

Advertising
Advertising

மேலும் விசாரணையில், ராஜசேகரின் தந்தை சுப்பிரமணி (45). தாய் லலிதா (40). இந்நிலையில், சுப்பிரமணியை பார்க்க ஆட்டோ டிரைவர் சுந்தர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, லலிதாவுக்கும், சுந்தருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த ராஜசேகர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் கள்ளக்காதலை விட மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், சுந்தரை வெட்டியுள்ளார், என தெரியவந்தது. இதையடுத்து, ராஜசேகரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related Stories: