×

அமைதியை பேணி காக்க மோடியுடன் இணைந்து பணியாற்றுவேன்... பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் அமைதியை பேணிக் காக்க மோடியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 345 இடங்களிலும், காங்கிரஸ் 92 இடங்களிலும், மற்றவை 105 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி 344 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தேர்வாகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர், உலக அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் அமைதியை பேணிக் காக்க மோடியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துச் செய்தியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான நட்பை பலப்படுத்துவது தொடரும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

மீண்டும் பிரதமாக உள்ள நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

மீண்டும் பிரதமாக உள்ள நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமர் கே.பீ ஷர்மா ஓலி

நேபாள பிரதமர் கே.பீ ஷர்மா ஓலி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி

பிரதமர் மோடிக்கு  ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய மக்களிடமிருந்து ஒரு வலுவான அதிகாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கான அரசாங்கம் என்றும் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல்

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமராக மீண்டும்  பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு பூட்டான் மன்னர் வாழ்த்து தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள பிரதமர் மோடிக்கு விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Imran Khan ,Modi ,Pakistan , Parliamentary Elections 2019, Prime Minister Modi, World Leaders, BJP, Imran Khan, Pakistan
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு