அதிமுகவினர் தகராறு... பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு... பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது

சென்னை: சென்னை ராணி மேரி கல்லூரியில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 5-வது சுற்று தொடங்கியது. அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது.

அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் பாஜக 337 இடங்களிலும், காங்கிரஸ் 95 இடங்களிலும், மற்றவை 110 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதே போல் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை ராணி மேரி கல்லூரியில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வாக்கு இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறி அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையை தொடரவிடாமல் பிரச்சினை செய்து வந்தனர்.

இதனையடுத்து 3 மணி நேரத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பணியை தொடர நினைத்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. 2 முறையாக நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. ஏராளமான போலீசார் வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: