ரெட்டேரி உள்ளிட்ட 3 ஏரிகளை சீரமைக்க தீவிரம்: சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இதனை கலைந்திட மேலும் மூன்று ஏரிகளை சீரமைக்கும் வேலை நடப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்திருக்கிறது. செங்குன்றம் அருகே உள்ள ரெட்டேரி,அயனம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகள் தான் சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்காக தயார் செய்யப்படும் நீர் நிலைகள் ஆகும். அது மட்டுமல்லாமல் பல்லாவரம் அருகே உள்ள கல்குவாரியில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று ஏரிகளில் இருந்து தினமும் தலா 10 மில்லியன் லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுப்பதற்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருப்பதாக பிரபுசங்கர் கூறியுள்ளார். லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆற்றை ஒட்டி 200 விவசாய கிணறுகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    

Related Stories: