×

உ.பி.யில் 56 இடங்களில் பாஜக முன்னிலை... பகுஜன் 23, காங்கிரஸ் 1 இடங்களில் முன்னிலை

லக்னோ: உத்திரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 56 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 23 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. உ.பி.யில் முக்கிய வேட்பாளர்களான வாரணாசி தொகுதி வேட்பாளரான பிரதமர் நரேந்திரமோடி 1 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளது. மேலும் ரேபரேலியில் போட்டியிட்ட சோனியாகாந்தி முன்னிலையில் உள்ளார். மேலும் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ராணி முன்னிலையில் உள்ளார்.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 324 இடங்களிலும், காங்கிரஸ் 102 இடங்களிலும், மற்றவை 116 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் மீண்டும் பிரதமராக மோடி தேர்வாகிறார்.

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது.

அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி 324 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 102 இடங்களிலும், மற்றவை 116 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 56 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 23 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 1 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.


Tags : BJP ,BSP ,Congress , Uttar Pradesh, BJP, Prime Minister Modi, Sonia Gandhi, Rahul Gandhi, Bahujan Samajwadi
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு