×

மக்களவை தேர்தல் முடிவுகளின் எதிரொலி: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் முதன்முறையாக 40,000 புள்ளிகளை தாண்டியது

புதுடெல்லி: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 40,000 புள்ளிகளை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து 40,054 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 322 இடங்களிலும், காங்கிரஸ் 111 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

இதனால் காரணமாக மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது  உறுதியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, முன்பை பங்கு சந்தையில் திடீர் ஏற்றங்கள் காணப்பட்டு வந்தன. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவிற்கி 40,054 புள்ளிகக்ள் உயர்ந்துள்ளது மேலும் நிஃப்டி சந்தையில் 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 என்று உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா டாலர் 20 காசுகள் உயர்ந்து 69.45 நிர்ணயிக்கப்பட்டுள்ளது . நாடு முழுதும் பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் வகுத்து வந்த இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டு சென்செக்ஸ் குறியீட்டு எண் 39,577.97 புள்ளிகளாக உள்ளது.


Tags : Lok Sabha ,Bombay Stock Exchange , Lok Sabha Election, Mumbai Stock Exchange, Index No.
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...