சீனாவிலும் சரிவை சந்தித்துள்ள டாடா நிறுவன கார்களின் விற்பனை

பெய்ஜிங்: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை 97,593 கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில் சீனாவில் ஜாகுவார் கார்களின் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளதால், நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு  நிறுவனத்தை வாங்கி ஜாகுவா மற்றும் லேண்ட்ரோவர் ரக கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த மூன்று காலாண்டுகளாக டாடா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றது. இதனால் சொகுசு கார் உற்பத்தி செய்யும் அலகுகளில், தேக்கநிலை ஏற்பட்டு சீனாவில் அந்நிறுவன கார்களின் விற்பனை குறைந்துள்ளது. கடந்த வாரம் 1052 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஜாகுவார் அலகில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் டாடா மோட்டார்ஸின் கடன் சுமை 97,593 கோடி ரூபாயை எட்டியுள்ளது . உப்பு முதல் மின்பொருள் வரையிலான,தனது பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை  மறுசீரமைக்கும் முயற்சியில் டாடா நிறுவனம் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளது.

Related Stories: