×

22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக-அதிமுக இடையே கடும் போட்டி

சென்னை: மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

அதிமுக கூட்டணி 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.  இதேபோல் தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 12 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

திமுக முன்னிலையில் உள்ள தொகுதிகள்


திருப்போரூர், தஞ்சாவூர், பெரம்பூர், ஆம்பூர், திருவாரூர், ஒட்டப்பிடாரம், குடியாத்தம், அரவக்குறிச்சி, பெரியகுளம், பரமக்குடி, திருப்பரங்குன்றம், பூவிருந்தவல்லி ஆகிய 12 சட்டமன்ற தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.


அதிமுக முன்னிலையில் உள்ள தொகுதிகள்


மானாமதுரை, சாத்தூர், விளாத்திகுளம், நிலக்கோட்டை, சூலூர், சோளிங்கர், ஆண்டிப்பட்டி, பாப்பிராட்டிபட்டி, ஒசூர், அரூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளது.



Tags : rivalry ,Lok Sabha ,AIADMK ,DMK , By-elections, DMK, AIADMK,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...