கஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மலைப்பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகு சாகுபடியை சில விவசாயிகள் மீண்டும் பயிர் செய்து, மிளகு விளைச்சலில் வருவாய் வருவதால் சற்று ஆறுதலாக உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், அறந்தாங்கி உட்பட இதர பகுதியிலும் விவசாயம் அதிக அளவில் செய்யப்படுகின்றன. இங்கு தென்னை, மா, பலா, வாழை, நெல், கரும்பு, சோளம், கடலை, பூக்கள் உட்பட பல்வேறு பயிர்கள் விளைகின்றன. வறட்சி பகுதியாக இருப்பதால் ஆறு, குளங்கள் இல்லாமல் 1000 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவமபர் 16ம் தேதி வீசிய கஜா புயலால் மாவட்டம் முழுவதும் பல லட்சம் அனைத்து வகை மரங்கள், பல ஆயிரக்கணக்கான வீடுகள், பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட விவசாயங்கள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டு பல விவசாயிகள் இதுவரை பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மலைப்பிரதேசங்களில் மட்டும் விளைய கூடிய மிளகு விவசாயத்தை கேரள பகுதிக்கு சென்று மிளகு கன்றுகளை வாங்கி வந்து பயிரிட்டோம். மிளகு ரகங்கள் 36 வகைகளாக இருந்த போதும் அதில் எந்த ரகம் இங்கு விளையும் என்று சோதனை செய்து, அதில் கரிமுண்டா, காவேரி, வயநாடா ஆகிய ரக மிளகு தான் இங்கு நன்றாக விளையும் என தேர்வு அதனை அவரது, தென்னை மற்றும் காப்பி, சந்தன மர தோப்பில் ஊடுபயிராக பயிரிட்டு, ஆண்டுக்கு 1 ஏக்கருக்கு மிக குறைந்த செலவில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மிளகு விற்பனை செய்துள்ளனர்.

கஜா புயலால், தோட்டத்தில் இருந்த தென்னை, சந்தனம், உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்ததால் மிளகு சாகுபடி பாதிக்கப்பட்டன. தற்போது, கொடி மிளகு பதிலாக செடி மிளகு பயிரிட்டு அதிக அளவில் மகசூல் செய்து, நல்ல வருவாய் கிடைக்கிறது. இதனை அறிந்த விவசாயிகள் பலர் இங்கு வந்து பார்வையிட்டு கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டதா மிளகு செடியை தங்களது தோட்டத்தில் பயிரிட்டு சில மாதங்களில் வருவாய் கிடைப்பதால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிளகு சாகுபடி சற்று ஆறுதலாக உள்ளன.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கஜா புயலால் எனது தோட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை, காபி, சந்தனம் மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. அதிலிருந்த மிளகு கொடிகள் வளருவதற்கு அருகே மாற்று மரக்கன்று நட்டு வளர்த்து வருகிறேன்.இந்நிலையில், கொடி மிளகுக்கு பதிலாக, செடி மிளகு உற்பத்தி செய்து, அதனை எனது தோட்டத்தில் பயிரிட்டு தற்போது நல்ல விளைச்சலில், ஒரு செடியில் குறைந்தது 2 கிலோ வரை மிளகு காய்க்கிறது. எந்த ஒரு விவசாயத்தில் லாபம் கொடுக்காத அளவில் மிளகு நல்ல லாபத்தை கொடுக்கிறது. உற்பத்தி செய்த மிளகை எப்போதும் விற்பனை செய்வதில் பிரச்னையே இல்லாத பயிராக உள்ளது.

இங்கு விளைந்த மிளகு ஏற்றுமதிக்கு, ஏற்ற மிளகாக உள்ளதால் அதிகளவு லாபம் கிடைக்கும். கஜா புயலால் நான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டாலும் மிளகு விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்கிறது என்றனர்.மிளகு ரகங்கள் 36 வகைகளாக இருந்த போதும் அதில் எந்த ரகம் இங்கு விளையும் என்று சோதனை செய்து, அதில் கரிமுண்டா, காவேரி, வயநாடா ஆகிய ரக மிளகு தான் இங்கு நன்றாக விளையும் என தேர்வு அதனை அவரது, தென்னை மற்றும் காப்பி, சந்தன மர தோப்பில் ஊடுபயிராக பயிரிட்டு அதிக லாபம் பெறுகின்றனர்.

Related Stories: