பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயிலில் உண்டியல் பணம் கொள்ளை

வேளச்சேரி: பள்ளிக்கரணையில் 700 ஆண்டு பழமையான ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று காலை பூசாரி கோயிலை திறப்பதற்காக வந்தபோது கேட் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு  அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து அந்த பகுதியில் ஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

Advertising
Advertising

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டபோது ஒருவர் இரும்பு கம்பியை எடுத்து வந்து, கோயில் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று கோயில் உண்டியலை உடைத்து திருடுவது பதிவாகி இருந்தது. மேலும்ம் அந்த வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் இருப்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: