வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல்: உரிமையாளருக்கு வலை

புழல்: சோழவரம் மசூதி தெருவில் ஒரு வீட்டில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ேநற்று காலை சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று நாகராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் 5 அடி உயரமுள்ள சுமார் 27 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

Advertising
Advertising

இது சுமார் 2 டன் எடையுள்ளது. ₹20 லட்சம் மதிப்புடையது என கூறப்படுகிறது. இந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை திருவள்ளூர் மாவட்ட வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த பகுதியில் வேறு இடங்களில் ஏதேனும் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories: