ராக்கெட்களை இயக்கும் திரவ ஹைட்ரஜன் சேமிப்பு கொள்கலன்: இஸ்ரோ தலைவர் சிவன் தொடங்கி வைத்தார்

அமராவதி: ஆந்திராவின் சிட்டியில் உள்ள விஆர்வி ஆசிய பசிபிக் உற்பத்தி மையம், திரவ ஹைட்ரஜனை சேமிக்கும் கொள்கலனை சதீஷ் தவான் விண்வெளி மையம் உதவியுடன் உருவாக்கியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சேமிப்பு திறன் 120 கிலோ லிட்டர் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய திரவ ஹைட்ரஜன் சேமிப்பு கொள்கலனான இதை இஸ்ரோ தலைவர் கே.சிவன்  நேற்று இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்லும் ராக்கெட்களில் இந்த திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர்  சிவன் பேசியதாவது: அதிநவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய திரவ ஹைட்ரஜன் சேமிக்கும் கொள்கலன்  இதுவாகும் என்றார்.

Related Stories: