2வது போட்டி: அயர்லாந்து படுதோல்வி தொடரை சமன் செய்து ஆப்கானிஸ்தான் அசத்தல்

பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 126 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆப்கானிஸ்தான் அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.ஸ்டோர்மான்ட், சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.  அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் முகமது ஷாஷத் 101 ரன், ரகமத் ஷா 62, ஹஷ்மதுல்லா ஷாகிதி 47, நஜிபுல்லா ஸத்ரன் 60* ரன் விளாசினர்.அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடேர் 3, மெக்பிரைன் 2, ரேங்க்கின், ஸ்டர்லிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 41.2 ஓவரில் 179 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. தொடக்க வீரர்  பால் ஸ்டர்லிங் அதிகபட்சமாக 50 ரன் (56 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), வில்சன் 34, பால்பிர்னி 20, கேப்டன் போர்ட்டர்பீல்டு 19, மெக்கார்தி 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

Advertising
Advertising

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் கேப்டன் குல்பாதின் நயிப் 9.2 ஓவரில் 43 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தவ்லத், அப்தாப், ரகமத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 126 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 1-1 என்ற  கணக்கில் தொடரை சமன் செய்தது. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும், அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி தொடரை சமன் செய்ததால் ஆப்கன் வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உலக கோப்பை தொடரை  எதிர்கொள்கின்றனர்.

Related Stories: