துளித்துளியாய்....

* ‘விரோத் கோஹ்லியால் மட்டுமே உலக கோப்பையை வென்றுவிட முடியாது. சக இந்திய வீரர்கள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே சாம்பியனாகலாம்’ என்று மாஸ்டர்  பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

* கவுகாத்தியில் நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரை இறுதியில் விளையாட நட்சத்திர வீரர்கள் ஷிவா தாபா, அமித் பாங்கல் உட்பட 7 இந்திய வீரர், வீராங்கனைகள் அரை இறுதிக்கு முன்னேறி  உள்ளனர்.
Advertising
Advertising

* ஒலிம்பிக் நீச்சலில் 15 வயதில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த லித்துவேனிய வீராங்கனை ரூடா மெய்லுடைட் (22 வயது), சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். படிப்பில் கவனம் செலுத்த  விரும்புவதால் இந்த கடினமான முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

* ஒருநாள் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் முதலிடம் பிடித்துள்ளார். டாப் 10ல் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தகுதி பெற்றுள்ளார்.

Related Stories: