லோன் வாங்க போறீங்களா? இதை மொதல்ல கவனிங்க

சொந்த வீடு, வாகனம், கல்விச்செலவு என எதுவாக இருந்தாலும் லோன் வாங்கித்தான் காலத்தை ஓட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. நடுத்தர மக்களுக்கு அவசர காலத்தில் கடன் வசதிகள்தான் கைகொடுக்கின்றன. ஆனால், கடன் வாங்குவதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். உடனே கிடைக்கிறதே என வாங்கி விட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது.

கடன் கொடுக்கும் நிறுவனங்கள், கடனை வழங்க பிராசசிங் கட்டணம் வசூல் செய்கின்றன.

கடன் வாங்க அனைத்து ஆவணங்களையும் கொடுத்து விட்டு எதிர்பார்த்து நிற்பவர்கள், இந்த பிராசசிங் கட்டணத்தை கவனிப்பதில்லை. சில நிறுவனங்கள் மற்றவர்களை விட 0.1 அல்லது 0.15 சதவீதம் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பார்கள். ஆனால், அவர்களின் பிராசசிங் கட்டணம் அதிகமாக இருக்கலாம். அப்படி இருந்தால் அந்த வட்டி குறைவாக இருந்தும் பலன் இல்லை.

வீட்டுக்கடன், கல்விக்கடன்கள் சில சமயம் குறைந்த பிராசசிங் கட்டணத்திலும், பிராசசிங் கட்டணம் இல்லாமலும் கிடைக்கின்றன. இவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால், பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்கள் ஆபத்தானவை. இவற்றுக்கு பிராசசிங் கட்டணம் மட்டுமின்றி வட்டியும் அதிகமாகவே இருக்கும். அதோடு, ஒரு இஎம்ஐ தவறினாலும் அபராதம் இருக்கும். நிறுவனத்துக்கு நிறுவனம் இது மாறுபடும். எனவே, அபராதம் அல்லது தாமத கட்டணம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

பலர் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே கடன் வாங்க முதலில் அணுகுவார்கள். ஏற்கெனவே வங்கி வாடிக்கையாளராக இருப்பதால், பரிவர்த்தனை நன்றாக இருந்தால் கடன் கிடைப்பது சுலபம். அதற்காக வட்டி. அபராதம் உள்ளிட்ட விஷயங்களையும், முன்கூட்டியே கடனை அடைத்தால் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளையும் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. கடனை எவ்வளவு காலத்தில் அடைப்பது என திட்டமிடுங்கள்.

ஏனெனில் இதற்கேற்ப வட்டித்தொகை மாறுபடும், உதாரணமாக 11 சதவீத வட்டியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கினால்,  ஆண்டுகளில் அடைக்க மாத இஎம்ஐ ரூ.16,369 ஆகவும், 5 ஆண்டுகளில் அடைக்க இஎம்ஐ ரூ.10,871 ஆகவும் இருக்கும். ஆனால்,  3ஆண்டுகளில் அடைத்தால் வட்டி ரூ.89,297தான். 5 ஆண்டாக இருந்தால் வட்டி ரூ.1.52 லட்சம் போய்விடும். எல்லாவற்றுக்கும் மேலாக பல இடங்களில் கடன் வாங்காதீர்கள். ஒரே இடத்தில் வாங்குங்கள், அதற்குமுன்பு உங்கள் வருவாயை பொறுத்து திட்டமிட்டு முடிவு செய்யுங்கள்.

Related Stories: